Tuesday, 23 February 2016

வெங்காயமும் தின்னலாம்; செருப்படியும் வாங்கலாம்!

‪#‎WhatsApp‬ கேள்வியும் எனது பதிலும்!

அ.தி.மு.க ஆட்சி முடியபோகிறது அடுத்து என்ன தி.மு.க தானே ???
ஒரு மன்னன் தன் குடிமகன் ஒருவனை அழைத்து " உனக்கு ஒரு தண்டனை, அங்கே தட்டிலிருக்கும் 100 வெங்காயத்தை திங்க வேண்டும் அல்லது செருப்பால் 100 அடி வாங்கிக்கொள்ள வேண்டும்" என்றான்.
அந்த மனிதன், செருப்படி வாங்கினால் கேவலம் என்று எண்ணி, வெங்காயம் திண்பதாக ஒத்துக்கொண்ட்டான்.
அதன்படி வெங்காயம் திங்க தொடங்கினான். 30-35 வெங்காயம் திண்றவனால் அதற்கு மேல் திங்க முடியவில்லை. எனவே அவன் "மன்னா, என்னால் வெங்காயம் திங்க முடியவில்லை எனவே நான் செருப்படியே வாங்கிக் கொள்கிறென்" என்றான்.
அதன்படி செருப்பால் அடி வாங்க தொடங்கினான். 40-50 செருப்படி வாங்கியவன் வலி தாங்க முடியாமல் அலறியடி தன்னால் செருப்படி வாங்க முடியவில்லை எனவே வெங்காயமே திண்பதாக கூறினான்.
மீண்டும் சில வெங்காயம் திண்றவனால் அதற்குமேல் முடியவில்லை, எனவே செருப்படி வாங்க தொடங்கினான், வலி தாங்க முடியவில்லை, மீண்டும்
வெங்காயம்- எரிச்சல் தாங்கமுடியவில்லை,
மீண்டும் செருப்படி என மாற்றி மாற்றி வாங்கி கொண்டிருந்தான். அவன் யாரென்று தெரியுமா? முகம் காட்டும் கண்ணாடியை பாருங்கள்..!!!
வேறு வழியே கிடையாது என அறிவிலி போல் சிந்திக்க தெரியாமல் 5 ஆண்டு தி.மு.க, எரிச்சல் தாங்க முடியாமல், 5 ஆண்டு அ.தி.மு.க, வலி தாங்க முடியாமல் மீண்டும் தி.மு.க இருவரிடமும் வாங்கிக் கொண்டிருப்பது யார்..? நாம் தானே..?
---------------------------------------------
‪#‎எனது_பதில்கருத்து‬:
தமிழ் நாட்டுக்கு திராவிடக் கட்சிகள் இரண்டு மட்டும்தானா? என குமுறுவதில் எந்த நியாமமும் இல்லை. அன்று திராவிடக் கட்சிகள் இவ்வளவு உயரத்திற்கு வளர்ந்து நிற்பதற்கு காரணம், அன்று சிறந்த தலைவர்கள், சிறந்த நெறியாளர்கள், சிறந்த எதிர்கட்சிகள், சிறந்த அரசியல் பார்வையாளர்கள் இருந்தார்கள். இன்று...???
ஆங்கிலத்தில் என்றும் தமிழில் சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்ட மாநிலத்திற்கு 'தமிழ் நாடு' என்ற பெயரை வாங்கித்தர கண்டன் சங்கரலிங்கனார் உயிரையே ஈந்தார். இன்று இவரைப் போல யார்?
இளம் வயதிலே இந்தி எதிர்ப்பு போராட்டதில் ஈடுபட்டவர் விஜயகாந்த்; இந்த காரணத்தாலே இந்தி பட வாய்ப்புகளை தூக்கி அடித்தவர். ஆனால் அவரை இன்று மீம்ஸ் போட்டு கேலிச்சித்திரங்களின் கதாநாயகனாக நிற்க வைத்தது நாம்தான். பாதி பங்களிப்பை மீடியாக்கள் கொடுத்துவிட்டன.
தலைவர்களின் பேச்சுகளில் பொதிந்துள்ள மாசுகளை நீக்கிவிட்டு, தேவையானவற்றை மட்டும் மக்களுக்கு அளித்து அரசியல் அறங்காத்தன அன்றைய ஊடகங்கள். சொல்வதை அப்படியே போட்டுவிட்டு, தன் மதிப்பீட்டை(Rating) தாறுமாறாக ஏற்றிக்கொள்கிறது இன்றைய ஊடகங்கள்.
எனவே, தலைவர்களை உருவாக்கத் தவறிய நாம் வெங்காயம் தின்றாலும், செருப்படி வாங்கினாலும் தவறில்லை அல்லவா?