தேவையான பொருட்கள்:
நேந்திரம்பழம் - 3
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
சிறிய வெங்காயம் - 2
தக்காளிப்பழம் - 2
கடுகு+உளுந்து - அரை தேக்கரண்டி
சீரகம் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அரைத்த பச்சை மிளகாய் - 3 தேக்கரண்டி
முந்திரி & கருப்பு உலர் திராட்சை (அல்லது) நிலக்கடலை - தேவையான அளவு
வாசனைக்காக:
கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - தேவையான அளவு
இலவங்க பட்டை - சிறிதளவு
உலர் ரோஜா இதழ்கள் - 5 இதழ்கள்
(பட்டை, இலவங்கம், ரோஜா இதழ் மூன்றும் சேர்த்து பிரியாணி மடிப்பு என மளிகையில் கிடைக்கும்)
ஆலிவ் எண்ணெய் / சுத்தமான தேங்காய் எண்ணெய் / கடலை எண்ணெய்
ஆலிவ் - பத்தியத்தில் இருப்பவர்கள் பயன்படுத்தலாம்
சுத்தமான தேங்காய் எண்ணெய் - கேரளத்து சுவை விரும்பிகளுக்காக.
கடலை எண்ணெய் - சத்து மிகுந்தது; தோலுக்கு நல்லது; சுவையூட்டிக்காக பயன்படுத்தலாம்.
அல்லது
வாசனைக்காக நெய் பயன்படுத்தலாம்.
செய்முறை:
முதலில் நேந்திரம்பழத்தை இரண்டாக அரிந்து, அதை குக்கரில் போட்டு 3 விசில்கள் வரை விட வேண்டும்.
குக்கர் வேலை முடிந்ததும்...
- வானலியில் எண்ணெ/ நெய்யை ஊற்றி, வழக்கம்போல கடுகு உளுந்தை பொறித்து, அதனுடன் வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு, சீரகம், நிலக்கடலை, பச்சை மிளகாய் சாந்து, கருவேப்பிலையை வாசனை வரும்வரை நன்கு வதக்கவும்.
- அடுப்பில் அனல் அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் நடுநிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.
- வெங்காயத்தை மட்டும் முதலில் போட்டு வதக்கினால், பதார்த்தம் சுவையுடன் மட்டுமின்றி, நல்ல வாசனையுடனும் கிடைக்கும். (வெங்காயம் ஆண்மைக்கு நல்லது)
- இலவங்கப் பட்டை-ரோஜா இதழ்-ஏலக்காயை இடித்தும் போடலாம், அல்லது பொடித்தும் போடலாம். (உடல் எடையைக் குறைக்கும் இலவங்கம்)
- மேற்கூறிய அனைத்தையும் செய்த பிறகு, வதக்கலை வானலியிலே வைத்துக்கொள்ளுங்கள்.
- இப்போது, குக்கரில் இருக்கும் நேந்திரம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, அதை வானலியில் கொட்டி நன்கு கிளற வேண்டும். ( நேந்திரம் பழம் உடல் பளபளப்பை தரும்)
- வாழையும் வதக்கலும் இரண்டரக்கலந்து செம்மஞ்சள் நிறமாக மாறும் வரை, கிளறி விடவேண்டும்.
- இதை செய்யும்போது, அடுப்பு அனல் கதகதப்பாகவே இருக்க வேண்டும். வெப்பம் அதிகரித்தால் பதார்த்தம் அடிப்பிடித்து தீய்ந்துவிடும்.
- கிட்டத்திட்ட பதார்த்த பதம் பஞ்சாமிர்தம் போல வந்ததும், வானலியை இறக்கவும்.
- தட்டில் வைத்து பரிமாறும்போது, பதார்த்தத்தின் மீது கொத்தமல்லி, புதினா இலைகளை தூவிவிடுங்கள். (மன அமைதி, தூக்கம், முடி வளர்ச்சிக்கு கொத்தமல்லி, புதினா)
- உடைத்த முந்திரி பருப்புகள், கருப்பு உலர்திராட்சைகளையும் தூவிடலாம். ( இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு நல்லது)
- பாரம்பரிய முறையில் சாப்பிடுபவர்கள் வாழையிலையில் வைத்து சாப்பிடலாம். (வாழையிலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்)
#அருண்வினோ

No comments:
Post a Comment