Sunday, 29 March 2015

ஆதார் அட்டை பின் விளைவுகள்..!

நண்பர் ஒருவர் ஆதார் அட்டை ஜோக் என்று ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.. அதன் தமிழ் வடிவம் இதோ..


2020 ஆம் வருடத்தில் இருந்து ஒரு காட்சி..

ஆப்பரேட்டர் : ஹலோ.. பிஸ்ஸா ஹட்..
கஸ்டமர் : என்னோட ஆர்டரை எடுத்துக்குறீங்களா ப்ளீஸ்..?
ஆப்பரேட்டர்: முதல்ல உங்க ஆதார் கார்டு நம்பரை சொல்றீங்களா சார்..?
கஸ்டமர் :ஒரே நிமிஷம்.. என்னோட ஆதார் கார்டு நம்பர் 889861356102049998-45-54610
ஆப்பரேட்டர்: ஸோ.. நீங்கதான் மிஸ்டர் சிங்.. நம்பர் 17 மல்லிகை தெரு காந்தி நகர்ல இருந்து கூப்புடுறீங்க.. உங்க வீட்டு நம்பர் 40942366, ஆஃபீஸ் நம்பர் 76452302 மொபைல் நம்பர் 0142662566. இப்ப நீங்க உங்க மொபைல்ல இருந்து எங்களுக்கு கால் பண்ணி இருக்கீங்க..
கஸ்டமர் : வாவ்.. இத்தனை நம்பரையும் எப்புடி சார் புடிச்சீங்க..? ஆப்பரேட்டர்: நாங்க மெயின் சிஸ்டத்தோட கனெக்ட்டடா இருக்கோம் சார்..
கஸ்டமர்: வெல்.. எனக்கு ஒரு இறால் பிஸ்ஸா ஆர்டர் எடுத்துக்க முடியுமா..?
ஆப்பரேட்டர்: என்னைக் கேட்டா அது வேணாம்னுதான் சொல்லுவேன் சார்..
கஸ்டமர் : வாட்..? எதுக்குங்க..?
ஆப்பரேட்டர்: உங்க மெடிக்கல் ரெக்கார்ட்ஸ்படி உங்களுக்கு ஹை பிபி இருக்கு.. அதுவுமில்லாம உங்களோட கொலஸ்ட்ரால் லெவலும் அதிகமா இருக்கு..
கஸ்டமர் : வாட்..? அப்ப நான் என்னதான்ய்யா சாப்புடுறது..?
ஆப்பரேட்டர்: எங்களோட லோ ஃபேட் ஹெக்கியன் மீ பிஸ்ஸாவை ட்ரை பண்ணிப் பாருங்க.. அது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..
கஸ்டமர் : எனக்கு புடிக்கும்னு உங்களுக்கு எப்புடிப்பா தெரியும்..
ஆப்பரேட்டர்: போன வாரம் நேஷனல் லைப்ரரில இருந்து பாப்புலர் ஹெக்கியன் உணவுகள்ன்ற புத்தகத்தை போன வாரம் நீங்க எடுத்திருக்கீங்க சார்..
கஸ்டமர் : மை காட்.. போதும்ய்யா.. அப்பன்னா நீங்க சொன்னதையே மூணு பிஸ்ஸா ஃபேமிலி சைஸ்ல குடுத்துருங்க..
ஆப்பரேட்டர்: நிச்சயமா சார்.. பத்து பேரு கொண்ட உங்களோட குடும்பத்துக்கு அது நிச்சயமா போதுமானதா இருக்கும்.. பில் அமௌண்ட் 2450 ரூபா சார்..
கஸ்டமர் : என் கார்டுலயே நான் பே பண்ணிறலாமா..?
ஆப்பரேட்டர்: இல்ல சார்.. நீங்க கேஷாத்தான் தர வேண்டி இருக்கும். உங்க கிரெடிட் கார்டு லெவலை நீங்க க்ராஸ் பண்ணிட்டீங்க. அது மட்டும் இல்லாம போன அக்டோபர்ல இருந்து 1,51,748 ரூபா க்ரெடிட் கார்டு பாக்கி வச்சிருக்கீங்க.. அதுல நீங்க கட்டாம விட்ட உங்க ஹவுசிங் லோனை நான் சேக்கலை..
கஸ்டமர் : சரி. அப்பன்னா உங்காளு வர்றதுக்குள்ள நான் பக்கத்துல இருக்குற ஏடிஎம்முக்கு போயி கேஷ் எடுத்து வச்சுர்றேன்..
ஆப்பரேட்டர்: அதுவும் முடியாது சார்.. இந்த ரெக்கார்டுபடி உங்க ஏடிஎம் ஓவர்டிராஃப்பட்ட லெவலையும் நீங்க தாண்டிட்டீங்க..
கஸ்டமர் : ப்ச்.. நான் எப்புடியாவது கேஷ் ரெடி பண்ணி வச்சுர்றேன்.. நீங்க பிஸ்ஸாவை அனுப்புங்க.. எவ்வளவுவ நேரத்துல வரும்..?
ஆப்பரேட்டர்: 45 நிமிஷம் ஆகும்.. அவ்வளவு நேரம் வெய்ட் பண்ண முடியாதுன்னா உங்கக பைக்ல வந்து நீங்களே கூட வாங்கிட்டு போயிறலாம் சார்..
கஸ்டமர் : வாட்..?
ஆப்பரேட்டர்: எங்க சிஸ்டத்துல இருக்குற தகவல்படி உங்ககிட்ட ஒரு பைக் இருக்கு. அதோட நம்பர் 1122 சார்..
கஸ்டமர் : ?? (இந்த படுபாவிக என் பைக் நம்பரை கூட தெரிஞ்சு வச்சிருக்கானுகளே..)
ஆப்பரேட்டர்: வேற எதாவது வேணுமா சார்..?
கஸ்டமர் : ஒண்ணும் வேணாம்ப்பா.. நீங்க விளம்பரத்துல சொன்னா மாதிரி அந்த மூணு ஃப்ரீ கோக் பாட்டிலையும் சேத்து அனுப்பிருவீங்கள்ல..?
ஆப்பரேட்டர்: நார்மலா குடுப்போம் சார்.. ஆனா உங்க மெடிக்கல் ரெக்கார்டுப்படி உங்களுக்கு சுகர் இருக்கு.. அதனால உங்க ஹெல்த்தை மனசுல வச்சு நாங்க அந்த ஆஃபரை உங்களுக்கு தரமுடியாது. சாரி சார்..
கஸ்டமர் : ***%&$%%### You $##$%%@!))) (உங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை ரீப்ளேஸ் செய்து கொள்க)
ஆப்பரேட்டர்: சார்.. வார்த்தைகளை கவனமா பேசுங்க சார்.. இப்புடிதான் ஒரு போலீஸ்காரரை கெட்ட வார்த்தைல திட்டினதுக்காக 2012 மார்ச்ல உங்களுக்கு ரெண்டு மாச சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் கிடைச்சதுங்குறதை மறந்துறாதீங்க..
கஸ்டமர் : (மயக்கம் போட்டு விழுகிறார்) படித்துப் பாரக்கும்போது இது வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால் ஆதார் அட்டை வினியோகிக்கும் அரசின் உள் நோக்கம்ம இதுதான்..

மீடியாக்களின் கோர உருவம்:26/11


மும்பை CSTயில் உள்ள தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தருணத்தில்......
ஓட்டலின் மேற்கூரை தன் வருத்தங்களை நிசப்தமின்றி கரும்புகையாய் கக்கிக்கொண்டிருக்க.........
பாதுகாப்பு படையின் வருகை, காலதாமதம் போன்ற ஒவ்வொரு விஷயத்தையும் இந்திய தொலைக்காட்சிகள் பிரேக்கிங் செய்திகளாகவும், மைக்கை பிடித்து கத்துவதாகவும் தந்துகொண்டிருந்த நேரத்தில்... கராச்சியில் இருந்த தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டு அறையில் இந்தியாவின் 67 டிவி சேனல்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவற்றை பார்த்து தொலைபேசி வாயிலாக தாஜ் ஹோட்டலுக்குள் இருந்த தீவிரவாதிகளுக்கு அவர்கள் தகவல் கொடுத்து தப்பியோடவும், பதில் தாக்குதல் நடத்தவும் வழி காண்பித்தனர்.
தேச பாதுகாப்பைவிட தகவலை யார் முந்தித்தருகிறார்கள் என்பதில்தான் பெரும் போட்டி நிலவியது. இதுதொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றமும் தொலைக்காட்சி மீடியாக்களுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. தாக்குதல் ஆரம்பித்த நேரத்தில் இருந்து முடியும் நேரம்வரை தொடர்ந்து அதை டிவிகளில் காண்பித்து தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக உதவியுள்ளனர் என்று சுப்ரீம் கோர்ட் குற்றம்சாட்டியது.
பாகிஸ்தானை சேர்ந்த ஒரு தீவிரவாதி இதை பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்,. இந்திய டிவி சேனல்கள் எங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தன என்று. சம்பவம் நடந்து ஆறு வருடங்கள் கடந்தும் இன்னும் டிவி மீடியாக்கள் மாறவில்லை.

செய்தியாக்கம்: அருண்வினோ

கேள்வியும் பதிலும்:: இந்தியாவின் தாய்மொழி ஹிந்தி ? அல்லது கட்டாய மொழி ?

நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி:தமிழ் தமிழ் எனக்கூறி இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தியை என்னிடம் இருந்து பிரிக்கிறீர்கள். ஏன்? நாம் இந்தியர் இல்லையா? நீங்கள் ஏன் எங்களை முட்டாள்கள் ஆக்குகிறீர்???

எனது பதில்:
சும்மா இந்தியன் என்று கராக்கரா என கத்தக்கூடாது.இன்றைய இந்தியா எப்படிப்பட்ட நாடு என்பதை நன்கு உணர்ந்த பின்னரே நான் இந்தியன் என்று மார்தட்டி சொல்லவேண்டும்.
இனம், மதம், மொழி என எல்லாவற்றிலும் பரந்துவிரிந்த பன்முகம் கொண்ட நாடே "இன்றைய இந்தியா".
எல்லாவற்றிலும் முற்றிலுமாக வேறுபாடுகளை கொண்டிருந்தாலும் நாட்டு மக்கள் அனைவரும் "மனிதம்" என்ற ஒற்றுமை உணர்வுடன் வாழும் நாடுதான் நமது இந்தியா.
இதுதான் நம் நாட்டின் மாபெரும் அடையாளம்.
அப்படியிருக்கையில் ஒரு அரசியல் கட்சியோ அல்லது குறிப்பிட்ட இயக்கமோ தனது கலாச்சார உத்திகளை இன்னொரு இனம்/மதம்/மொழி சார்ந்த மக்களின் மண்டையில் திணிக்க நினைப்பது என்பது இந்த தேசத்திற்கு துரோகம்செய்வதற்கு சமம்.
அதேபோல் தான் நீங்கள் கேட்ட கேள்விக்கும் பதில். உயர்த்திக்காட்டப்படும் இன்னொரு தரப்பினருடைய மொழியை நம்மவர் பெரிதென கண்டால் அதைவிட கொடிய செயல் வேறு இல. நமக்கு விருப்பம் இருந்தால் அல்லது தேவை எனப்பட்டால் அம்மொழியை நாம் கற்றுக்கொள்ளலாமே தவிர அதையே இந்திய நாட்டின் தாய்மொழியாக கருதக்கூடாது. அது வறுத்தெடுத்த மடமை.
இந்தியாவிற்கென குறிப்பிட்ட ஒரு தாய்மொழி என்று எதுவும் கிடையாது. ஆனால் தற்கால இந்தியாவின் "அலுவல் மொழியாக மட்டுமே ஹிந்தி"அங்கிகரிக்கப்பட்டுள்ளது என்பதில் தெளிவு அவசியம். நீங்கள் அரசு பணிகளுக்கோ வடநாட்டு வேலைகளுக்கோ செல்ல விரும்பினால் ஹிந்தி மொழியை கற்கலாம். அதைவிட்டுவிட்டு ஏதோ ஒரு தீயசக்தி கிளப்பிவிட்டுள்ள புறம்பான கொள்கையை நம்பி நாட்டில் அமைதியை சீர்குழைக்கவேண்டாம்.

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் 'சரியான புரிதலுடன் மட்டுமே.


மேலும் விவரங்களை அறிய: 


வாழ்க தமிழியம் வாழிய இந்தியம் 
ஆக்கம்:அருண்வினோ