யப்பப்பா....
வருஷத்துக்கு 365 நாளும் தொப்பைய குறைக்கணும்,
உடம்பை குறைக்கணும்னு ஏதாவது ஒரு
டம்மி டப்பாசு மருந்து மாத்திரைகளை
வாங்கித்தின்னுட்டு, கீரை காய்கறி மட்டுமே
என்னால சாப்பிட முடியாது பாருங்க?
சோ டயட் மாதிரியான ஒன்றை
ஃபாளோ பண்ணிட்டு, போதாத குறைக்கு வாக்கிங்
மாதிரியான ஒரு அன்ன நடை
நடந்துட்டு, அதுக்கு அப்புறமா கீழ குனிஞ்சி தொப்பைய பார்த்து கண்ணீர்
வடிக்காத குறையா நம்ம ஆளுங்க இன்டெர்நெட்டுக்கு வந்து " என் தொப்பைய குறைக்க
வழியே இல்லையா " ன்னு தேட சொல்லி
கூகுளையே குழப்பி விடுவாங்க.
அப்படியெல்லாம்
செய்யப்படாதுன்னு சொல்லி உங்களை இந்தப்பக்கம்
கூட்டிகிட்டு வர போறேன்.
எனக்கு இவ்ளோ ஒடம்பு
இருக்கே.....
நான் இவ்ளோ குண்டா இருக்கனே...
என் தொப்பையார் பெருசா இருக்காரே...
அப்படிலாம்
இனிமேல் எப்போதும் நினைக்காதிங்க.
அது எப்படி பாஸ் அப்படி
நினைக்காம இருக்குறது? ன்னு கேக்கலாம்.
"நீங்கள்
அழகு என்பதை முதலில் நீங்கள்
நம்புங்கள். நிறத்திற்கும் உடலுக்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். உங்களை
நீங்களே ரசியுங்கள்". - சுவாமி அருணானந்தா :D
இப்போ உங்களுக்கு தெரிஞ்சிதா? உடல் என்பது அழகின்
மறுப்பதிப்பு அல்ல என்பது.
சரி கடுப்பவாதிங்க பாஸ்....
ஷார்ட்
அண்ட் சிம்ப்பிளா சொல்லிடுறேன்
அரிசியை
முழுவதுமாக தவிர்க்கவும்:
என்னா??அதெல்லாம் தவிர்க்க முடியாதா? நீங்க உடம்பை/தொப்பைய
குறைக்கணும்னு ஆசைப்பட்டா முதலில் இதை தவிர்த்தே
ஆகணும் பாஸ். அரிசி சோறு,
உப்புமா, பொங்கல், தோசை இதைஎல்லாதையும் மறந்துடணும்.
ஆனா இந்த லிஸ்ட்ல விட்டுப்போன
அந்த இட்லியை மட்டும், அதை
குறைந்த பட்சமா மட்டும்தான் எடுத்துக்கணும்.
விட்டு விலாசக்கூடாது. தினமும் 1 வேளை 3 இட்லி எடுத்துக்குங்க.
மீறினால் குண்டாவீர்.
ராகி, கம்பு, வரகு, சாமை:
இதெல்லாம்
என்னா? அப்படின்னு கேக்கமாட்டிங்கணு நம்பி சொல்கிறேன்.
இதெல்லாம் கொஞ்சம் விலை அதிகம்
தான். இருந்தாலும் விலைக்கேற்ப சத்து உங்களுக்கு கிடைக்கும்,
நான் கேரண்டி. காலை டிபன்க்கு ராகில
கூழோ கஞ்சியோ வார்த்து
குடிங்க. கம்பு சோறு, கம்மங்கூழ்,
வரகரிசி சாதம் இதெல்லாம் ஈசியா
செஞ்சி சாப்பிடலாம்.
பார்க்கவும்: Ragi Recipies .
பச்சை காய்கறிகள் :
உங்களுக்கு
தெரிஞ்சது தான் பாஸ். ஒரு
வேளை சோற்றுக்கு பதிலா ஒரு கூடை
காய்கறி பொரியல், இல்லைனா அரைவேக்காட்டில் வெந்த
காய்கறிகளை சாப்பிடலாம். தயவுசெய்து அடர்ந்த பாலை தவிர்க்கவும்.
கீரைல பாலக்கீரை மட்டும் எடுத்துக்குங்க. உடமும்
இளைக்கும் சுறுசுறுப்பாவும் இருக்கச்செய்யும். அவக்கேடோ, கோஸ், கேரட், முள்ளங்கிலாம் பயங்கரமா சாப்பிடலாம்.
கிரீன்
டீ + ஓட்ஸ்:
வ்வோக்...
ரெண்டுமே சுவையற்றது. அப்படின்னு நெனச்சா உங்களால இந்த
ஜென்மத்துல ஒல்லியாக முடியாது. சோ தினமும் காலைல
க்ரீன் டீ (வித் அவுட்
சுகர்) சக்கரை போடாம குடிங்க.
குடிச்சே ஆகணும்.
ஓட்ஸ் ல இப்போ விதவிதமா
ரெசிப்பிலாம் கிடைச்சிருக்கு. நெட்ல தேடி கண்டுபுடிசிக்குங்க
பாஸ்.
பார்க்கவும்: (நீங்க
சோம்பேறி ராஜா/ராணியா இருந்தா
மட்டும் இங்கே பாருங்க Oats Recipies)
உடற்பயிற்சி:
கஷட்டப்பட்டுதான்
ஆகோணும். கைய காலை மடக்கி
உடம்பையே நாலா அஞ்சா மடிச்சி
வித்தை காட்டுற அளவுக்கு செய்ய
வேண்டாம். பட்டும்படாம பொறுமையா லேசா மெலோடியா உடற்பயிற்சி
செஞ்சாலே போதும் பாஸ்.
முடியலன்னா Simple Ways To Lose Tummy Without Exercising
ஆப்பிள்
சிடர் வினிகர்:
இதைதான்
முதல் லைன்ல போட்டு ஹை-லைட் பண்ணி ஷோ
பண்ண வச்சிருக்கணும். ஆனா நீங்கள் இதை
சாப்பிடுறதுக்கு முன்னாடி மேல சொல்லி இருக்குற
எல்லாத்தையும் ஃபாளோ பண்ணியாகணும். அதை
ஓமிட் பண்ணிட்டு சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு இங்க ஓடி
வருபவர்களை பழிவாங்கவே சில சைட் எஃப்பெக்ட்கள்
காத்திருக்கும்.
தினமும்
இரவில் தூங்கச்செல்லும் முன்பு 1/4 லிட்டர் தண்ணிக்கு 1/2 மூடி
வினிகரை ஊத்தி, கலக்கி ஒரு
ரவுண்ட் போடுங்க.
இதையெல்லாம் கரீட்டா பின் பற்றுங்க பாஸ்.
ஒரே மாசத்துல தாறுமாறா மாற்றம் தெரியும். அப்புறம் என்னை மாதிரி நீங்களும்
சொல்லிக்கலாம் "எப்படி இருந்த நான்
இப்படி ஆகிட்டேன்" ன்னு
![]() |
| In Pic; Arun Vino. நம்புங்க பாஸ் சத்தியமா இது நானேதான் |

Wow. Epudi iruntha ne ipudi agita
ReplyDelete:D I jst followed the good diet
Delete