இந்த பாப்பா தூங்கிக்கிட்டு இருக்க பஸ்ல...
முழு இரவையும் சுகமானதாய் மாற்றியிருந்த மந்த மாருதத்தின் வேகம் சற்று தனித்தோய்ந்திருந்தது. சாளரங்களுக்குள் போர்த்தப்பட்டிருந்த திரைகளின் ஊடாக இளம் வெயில் என் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, தட்பவெப்பத்தை இதமாக அனுபவித்துக்கொண்டிருந்தேன்.
கோய்ம்பேட்....கோய்ம்பேட்...கோய்ம்பேட்…
அட யாரய்யா து.
காளகேய மொழியை தழுவியவாறு விடுபட்ட ஒரு நாலைந்து சொற்களால் மொத்த தூக்கமும் தூக்கியடிக்கப்பட்டது. சோபம்பல் முறித்துக் கொண்டிருக்கையில்...
சில நொடிகளில் மீண்டும்,
கோய்ம்பேட்....கோய்ம்பேட்...கோய்ம்பேட்… கோய்ம்பேட்லாம் இறங்கிக்குங்கன்னு டமிழில்.
கர்நாடகா பேருந்து நடத்துநர் பாருங்க, அதனாலதான் அகராதில டமிழ் கொஞ்சம் கம்மி. ஆனா கன்னடமிழ்ல மேட்சிங்கா பேசி அழகா சமாளிப்பாப்ள. தெறமசாலி….!!

பேருந்துல இருந்து கீழ இறங்குனதும் சுர்ர்ர்ர்ர்ர்ர்ருனு கால்ல இருந்து ஏறுது.. உச்சந்தலையில இருந்து இறங்குது... சூடு சூடு.
ரெண்டு வருஷமா குளுகுளுன்னு இருக்க இடத்துல இருந்தே பழகிப்போச்சு இந்த பெர்சியன் பூனைக்கு. உடம்புல புழுக்கம் இருந்தாலும் மனசு நல்லா ஜிலு ஜிலுன்னுதான் இருந்துச்சி. காரணம் சாலையோரத்தில் நின்றிருந்த தேவதைகள் கொடுத்துக்கொண்டிருந்த தொடர் தரிசனங்கள்தான்.
“ஒருத்தி பார்த்தாள், ஒருத்தி சிரித்தாள், ஒருத்தி நெளிந்தாள், இன்னொருத்தி முறைத்தாள், வெட்கினாள் இன்னுமொருத்தி...ன்னு கனவுகள் ஆயிரம் சொன்னது. அதில் ஒன்றாவதாக சொன்ன ஒன்றே ஒன்று பலித்தது.”
தூக்கத்திலிருந்து சற்றுமுன்னே விடுபட்டிருந்ததால் போதை பிடித்த கண்களுக்கு உருவங்களை ஊர்ஜிதம் செய்வதில் எடக்குமடக்கு வேறு.

இப்படியே டோரா பூஜ்ஜி போல சில தூரம் கூட்டிச்சென்ற நடைமேடை, மெதுமெதுவாய் எனது மனதை நிசப்தத்திற்குள் உருட்டிவிட்டது. அந்த சிறு புத்தக நிலையம் என்னை தண்ணீர் கம்பளமிட்டு வரவேற்றுக்கொண்டிருந்தது. வெள்ளிக்கிழமை இரவு பேருந்து ஏறியவர்கள் தூக்கிச்சென்ற ஆயிரம் மூட்டைகளிலிருந்து, விடுபட்டு விழுந்த சில கனவுகளின் கறைகளை தண்ணீரிட்டு போக்கிக்கொண்டிருந்தது சென்னை புறநகர் பேருந்து நிலையத்தின் சுகாதாரத் துறை. கிட்டத்திட்ட ஆறேழு வருடங்களுக்குப் பிறகு, நிலையத்தின் என்னுடைய இடத்தில் யாரோ ஒரு சிறுவன் நின்று வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தான். அவனருகே சென்று, பாஸ்…. ஒரு ‘டைம் பாஸ்’ கொடுங்க என்றேன்.
பத்து ரூவா கொடுங்கன்ணே ன்னு சொல்லிட்டு டைம் பாஸை எடுத்து நீட்டினான். சிறு புன்னகையுடன் வாங்கிக்கொண்டு காசைக் கொடுத்தேன்.
ஏம்பா சாப்பிட்டியா?
ம்ம்ம் ஆச்சுங்கன்னே…
திரும்பிப்பார்த்தேன், நினச்ச மாதிரி அந்த தூணுக்கு கீழ ரெண்டு குண்டானும், அதைச் சுத்தி சோற்றுப் பருக்கைகளும் கடலைக் கொட்டைகளும் பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியா இருந்தது. தூணுக்கு பக்கவாட்டில் கடிச்சி உறிஞ்சப்பட்ட தண்ணீர் பாக்கெட்டுகள், வலி தாங்க முடியாம ஒன்னுமேல ஒண்ணா சாய்ந்து கிடந்தன.
இங்கத்தான் உக்கார்ந்து சாப்பிட்டிங்களா? (பன்மையில்)
ஆமா ப்ரோ என்றால் அந்த பையன்.
ம்ம்ஹும்….
தொடர்ந்து நடையை கட்டினேன்…
அந்த பையனுக்கு சம்பளம் ஒரு ஆறாயிரம் இருக்கும்ல?...
ஆனா சாப்பாட்டு இட விஷயத்துல கொஞ்சம் அக்கறை காட்டியிருக்கலாம் அந்த ஓனர். நல்ல மனுஷன்தான்… கொஞ்சம் யோசிச்சி பார்க்கணும் என்று என் மனம் யாரோ முகம் தெரியாத ஓனருக்கு சர்டிஃபிக்கேட் கொடுக்குதுன்னு நெனச்சிக்காதீங்க.

கையில் உள்ள புத்தகத்தின் பக்க நுனிகளை படபடத்துக் கொண்டே அன்றைய நினைவுகளை மீண்டும் சோப்பு போட்டு அலசி காயவைத்துக்கொண்டே நடக்கலானேன்.
பிரம்மாண்டமான ரிசப்ஷன் ஹாலை கடந்து வெளியில் வந்ததும் நடை கொஞ்சம் வேகம் கட்டியது.
சென்னை மாநகரப் பேருந்து ஓட்டுனர்கள் சிலர் கும்பலாக நின்று தினசரியை அலசிக்கொண்டிருந்தனர்.
சர், நான் சென்ட்ரல் போகணும். எந்த பஸ்ல ஏறுறது?
படக்கென்று தினசரியை மடக்கிவிட்டு, சார் 15 பி அங்கதான் வந்து நிக்கும். அதுல ஏறிக்குங்க. என்று தென்கிழக்குப் பக்கம் கை காட்டினார் ஒரு ஓட்டுனர்.
ய்யாஹ் க்கே… என்று சொல்லிவிட்டு அடுத்த அடி எடுத்துவைத்தபோது….
சார்… சார்… (அவர்)
என்னங்க சர்?
சென்ட்ரலுக்கே போகனுமா? இல்ல அதுக்கு முன்னாடி எங்கயாவது இறங்கணுமா?
டக்கென்று, மொபைலை எடுத்து நோண்டினேன். எடுத்து வைத்திருந்த திரையடியில் உள்ள விலாசத்தின் கடைசி வரியை படித்துவிட்டு, எவரெஸ்ட் பஸ் ஸ்டாப்
சர், நான் அந்த ஸ்டாப்ல இறங்கனும்.
ஓஹோ, அப்ப நீங்க ஒயிட் போர்ட் வச்ச பஸ்ல ஏறிடுங்க, அதுதான் எவரெஸ்ட் வழியா போகும். கிரீன் போர்ட் பஸ் போகாதுன்னு விலாவரியா சொன்னார் அவர்.
என்னவொரு அக்கறை நம்ம ஊரு டிரைவருக்கு..!!
இதே அந்த ஊரா இருந்தா நாலு தடவை கேள்வி கேக்கணும்; தமிழை விட்டுப் பார்க்கணும்; பதில் வரலன்னா இந்திய விடணும்; அதுக்கும் மசியலன்னா கடவுள வேண்டிக்கிட்டு கன்னடாவ லைட்டா விடும்போதே; அந்தாளுக இங்லீஷ கச்சிதமா கையில எடுத்துடுவாங்க.
நம்ம சென்னையில இவ்ளோ அக்கறையா நடத்துறாங்கன்னு மனசுல வேக வேகமா திருப்தியலைகள்.
இப்படி கேஷூவலா போயிக்கிட்டு இருக்க; அந்த கொஞ்ச நேர பயணத்துல நெஞ்ச ஒடச்சிக்கிட்டு வெளிய கைய விட்ட மனசாட்சி, காதில் தொங்கிக்கொண்டிருந்த எர்போனின் மைக்கை பிடித்து பேச ஆரம்பித்தது...
“
சோழ மண்டலத்தின் பரந்து விரிந்த பேராழி கொண்ட சிங்காரச் சென்னைப் பட்டினம் இன்னும் எத்தனை பெரும்பெயர்களையும், புகழையும் அடைந்தாலும், எவ்வித பகட்டும் கொள்ளாமல் தன்னைத் தேடி வரும் ஒவ்வொரு மனிதனுக்கும் வழி சொல்லும் கடமையை உணர்ந்து மிக எளிமையாய் தான் வீற்றிருக்கிறது. பெங்களூரு, டெல்லி போன்ற நகரங்களைப் போல புது மனிதர்களை மிரட்டுவதில்லை. தமிழகத்தின் எங்கோ ஒரு குக்கிராமத்திருந்து கையில் கொஞ்சம் பணத்துடன், சென்னை பார்த்துக்கொள்ளட்டும் என தளராத நம்பிக்கையுடன் லாரி ஏறி வந்த எத்தனையோ பேருக்கு, நம்பினார் கைவிடுவதில்லை என அடைக்கலம் கொடுத்து, நல்வாழ்வு புகட்டியுள்ளது இந்த அமைதிப் பெருநகரம். அவர்களை ஊர், சாதி, மதம், நாடு என்று இனங்காணாமல் வரவேற்று 10 நாட்களில் சொந்த ஊராக மாறிவிடும் தோழமைமிகு நகரமிது. இதானால்தானோ என்னவோ, நூறு டிகிரிக்கு மேல் வெயில் தாளித்து எடுத்தாலும், பெருமழை பெருவெள்ளம் தத்தளிக்க விட்டாலும், சென்னைவாசிகளுக்கு தங்களின் ஆருயிர் நகரத்தின் மீதான காதல் சற்றும் குறைவதில்லை என்கிறேன். அப்படியென்றால் சென்னையை நம்பிச் செல்பவரின் வாழ்க்கை பெரும்பிரகாசம்தான்.
“
பேசிக்கொண்டிருக்கும்போதே
‘எவெரெஸ்ட்...எவெரெஸ்ட்....
வீல் கீச்சு கீச்சு சகீச்சுன்னு கத்திட்டு நின்னுடுச்சி.
#தொடரும்

No comments:
Post a Comment