Friday, 10 April 2015

ஆந்திரா துப்பாக்கிச்சூடு விவகாரம் - தமிழர்கள் கேட்க மறந்த கேள்விகள்

 200 பேர் மரம் வெட்டினார்கள்... சுட்டோம்.. 20 பேர் பலியானார்கள் எனில் ஒருவர் கூட காயம்படவில்லையா? காயம்பட்ட நிலையில் ஒருவர் கூட பிடிபடவில்லையா? 

 கேள்வி-1:
  • அதிகாலையில் வனப்பகுதிக்குள் நடந்த தேடுதல் நடவடிக்கையில் 200க்கும் மேற்பட்டோர் மரம் வெட்டிக் கொண்டிருந்த நிலையில்"தற்காப்புக்காக" சுடும் போது இறந்தவர்களின் ஊர், பெயர், முகவரி, குலம், கோத்திரம் எல்லாம் ஆந்திரா அதிகாரிகளுக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்தது எப்படி? 
 கேள்வி-2:
  • வனப்பகுதிக்குள் மரம் வெட்டிய 200 பேரும் தமிழர்கள் என்பதை எப்படி போலீஸ் அதிகாரி காந்தராவ் கண்டுபிடித்தார்? 
 கேள்வி-3:
  • சுட்டுக் கொல்லப்பட்டோரில் 2 பேர் சர்வதேச கடத்தல் கும்பல் என்றெல்லாம் சொல்லத் தெரிந்த அதிகாரிக்கு அவர்கள் எந்த தேசம்? அவர்களது பூர்வோத்திரம் என்ன என்பதை மட்டும் சொல்லாமல் மறைத்தது எப்படி?
 கேள்வி-4:
  •  200 பேர் மரம் வெட்டினார்கள்... சுட்டோம்.. 20 பேர் பலியானார்கள் எனில் ஒருவர் கூட காயம்படவில்லையா? காயம்பட்ட நிலையில் ஒருவர் கூட பிடிபடவில்லையா? அப்படியானால் எத்தனை போலீசார் தேடுதல் நடவடிக்கைக்குப் போனார்கள்? 
 கேள்வி-5:
  • தமிழர்கள் தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த, உயிருக்குப் போராடிய ஒரு போலீசாரைக் கூட நீங்கள் இதுவரை வெளி உலகுக்கு காட்டவில்லையே ஏன்?
 கேள்வி-6:
  • அதிகாலையில் வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் பலியானதாக சொல்லப்படுவோர் அருகில் இருக்கும் மரங்கள் எதுவுமே பச்சை மரமாக இல்லையே... 
 கேள்வி-7:
  • பலியான ஒவ்வொரு சடலமுமே சொல்லி வைத்தாற்போல ஒவ்வொரு செம்மரத்தை தாங்கியபடி இருக்கிறதே? 
 கேள்வி-8:
  • பலியான அனைவரது உடல்களுமே அரை நிர்வாணமாக இருக்கிறதேபலியான பலரது உடல்கள் தீக்காயங்களுடன் எரிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது எப்படி? சுட்டுப் படுகொலை செய்த உடன் தடயங்களே இருக்கக் கூடாது என சடலங்களை ஆந்திரா போலீஸ் எரித்ததா? 
 கேள்வி-9:
  • துப்பாக்கியால் சுடுவதற்கு பதிலாக இலங்கை ராணுவத்தைப் போலதடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி படுகொலை செய்தததா? 
 கேள்வி-10:
  • சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேரில் 12 பேர் தமிழர்கள் என்று காலையில் கூறிய ஆந்திரா போலீஸ் திடீரென மாலையில் 20 பேரும் தமிழர்களே என்று புள்ளி விவரத்துடன் கூறுகிறது..காலையில் 12 தமிழர்கள்.. மாலையில் 20 பேரும் தமிழர்கள் என்பதை யாரை வைத்து விசாரித்ததுஆந்திரா போலீஸ்? படுகொலையான 20 பேரின் முழு விவரமும் ஆந்திரா போலீஸுக்கு முன்பே தெரிந்து இருந்ததால்தானே இது சாத்தியமானது? 
 கேள்வி-11:
  • சுட்டுப் படுகொலை செய்ப்பட்டோரில் ஒருவர் கூட ஆந்திரா மாநிலத்தவரே இல்லையே அது எப்படி?
 கேள்வி-12: 
  • திருப்பதி சேசாலம் வனப்பகுதி தமிழகத்தின் ஒருங்கிணைந்த பகுதியா? ஆந்திராவா? அங்கே ஆந்திரர்கள் ஒருவர் கூட கடத்தல்காரர்களே இல்லையா? 

 தமிழ்நாட்டுதமிழர்கள் மட்டும் இந்த கேள்விகளை எழுப்பவில்லை.


நன்றி: Oneindia Tamil

No comments:

Post a Comment